Header Ads

 • Breaking News

  26YearsOfThalapathyVIJAY | " Naalaiya Theerpu Mudhal Sarkar Varai | Tribute To Thalapathy | 2018


  தளபதி விஜய் இது வெரும் பேர் இல்லங்க ஒரு பெரிய கூட்டத்தோட அடையாளம்.இன்னைக்கு இவ்ளோ பெரிய நடிகரா இருக்க இவரு சும்மா வந்துடலங்க. இந்த இடத்துக்கு வரதுக்கு 26 வருஷம் ஆகியிருக்கு. இந்த 25 வருஷத்துல இவரு கடந்து வந்த பாதை என்னங்கிறத இப்போ பார்க்கலாம்
  டிச 4 ந் தேதி 25 வருடங்களுக்கு முன்னாடி , தன்னோட அப்போவோட இயக்கத்துல வெளிவந்த நாளைய தீர்ப்பு படம் மூலமா அறிமுகம் ஆனாரு.என்னதான் அதுக்கு முன்னாடி குழந்தை நட்சத்திரமா நடிச்சிருந்தாலும் அவர் ஹீரோவா நடிச்ச முதல் படம் நாளைய தீர்ப்பு தான்.
  என்னதான் பெரிய இயக்குனரோட மகனா இருந்தாலும் அந்த பேர் அவருக்கு பெரிய வெற்றிய வாங்கித் தரல.தொடர்ந்து ஒரு ரெண்டு மூணு படம் ஓடமா இருந்த நேரத்துல எஸ்.ஏ.சந்திரசேகரோட ஆஸ்தான ஹீரோவான விஜய்காந்த் அவர் மேல வெச்சிருந்த மாரியாதையால செந்தூரப்பாண்டி படத்துல விஜய்யோட சேர்ந்து ஒரு கவுரவ தோற்றத்துல நடிச்சு குடுத்தாரு. இந்த படம் மூலமா தான் விஜய்ய நிறைய மக்களுக்கு தெரிய ஆரம்பிச்சது.

  அந்த நேரம் வர விஜய்க்கு பெருசா படங்கள் ஏதும் ஓடாததால் அவரு படங்கள்ளா ரொமான்ஸ் சீன்ஸ் எல்லாம் அதிகமா இருக்கதாலயும் அவர ஒரு பிட்டு பட ஹீரோவாதான் மக்கள் பார்த்தாங்க.ஒரு பிரபல வார நாளிதழ் இவர் மூஞ்சியொல்லாம் காசு குடுத்து பார்க்கணுமானு இவர பயங்கரமா விமர்சிச்சாங்க.

  அப்போதான் அவருக்கு ரொம்ப தேவைப்பட்ட ஒரு வெற்றி அவருக்கு கிடைச்சது.விக்ரமன் இயக்கத்துல வெளிவந்த பூவே உனக்காக படம் விஜய்யோட முகத்த பட்டி தொட்டியொல்லாம் கொண்டு சேர்த்துச்சு.இந்த படத்தோட வெற்றி விஜய்ய தமிழ்நாட்டு பெண்ணுங்க மனசுல நல்ல ஹீரோங்கிற இடத்துல கொண்டு சேர்த்துச்சு.இந்த படத்தோட ஷூட்டிங் அப்போதான் ஒரு ரசிகர் இவருக்கு இளைய தளபதி அப்டிங்கிற டைட்டில் கொடுத்தாங்கன்னு பல பேட்டிகள்ல அவரே சொல்லிருக்காரு.
  இதுக்கு அப்பறம் விஜய்க்கு நல்ல படங்கள் வர ஆரம்பிச்சது.அப்போவே விஜய் பாட்டு, டான்ஸ்னு பட்டைய கிளப்பிட்டு இருந்தாரு.இந்த காலத்துல தான் விஜய்யோட கேரியர்ல ரொம்ப முக்கியமான படமான காதலுக்கு மரியாதை படம் வந்துச்சு.அந்த படம் விஜய்ய இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போச்சுனே சொல்லலாம்.
  இதுக்கு அடுத்து இடையில நிறைய தோல்விகள் இருந்தாலும் லவ் டுடே , ப்ரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் , குஷி,ப்ரியமானவளேனு தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல படங்கள் குடுத்து மக்கள் மனசுல இடம் பிடிச்சாரு.

  அதுக்கு அப்பறம் அவர் நடிச்ச பத்ரி,பகவதி போன்ற சில படங்களுக்கு சரியான வரவேற்பு இல்லனாலும்.விஜய்கான வரவேற்பும் அவருக்கான ரசிகர் கூட்டமும் குறையவேயில்லை.இது வர விஜய் வெறும் சாக்லேட் பாய் ஆக தான் இருந்தாரு.
  2003வது வருஷம் தான் விஜய்யோட வாழ்க்கையில ஒரு முக்கியமான வருஷமான அமைச்சது.அந்த வருஷம் தீபாவளிக்கு வெளிவந்த திருமலை படம் விஜய்ய ஒரு ஆக்ஷன் ஹீரோவா மாத்துச்சு.அந்த படத்த தயாரிச்ச இயக்குனர் கே.பாலச்சந்தர் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு அப்பவே சொல்லிருந்தாரு.

  2004 ல வெளியான கில்லி அவர் அந்த இடத்துக்கு முன்னேற ஒரு பெரிய மைல்கல்லா இருந்தது.கில்லி படம் மூலமா விஜய்க்கு 6ல இருந்து 60வரை ரசிகர்கள் கூட்டம் கிடைச்சது.அது வர ரஜினிக்கு மட்டுமே இருந்த ஒரு வரவேற்பு விஜய்க்கு கிடைச்சத பார்த்து அவரோட வளர்ந்து வந்த பிற நடிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துச்சு.படையப்பா படத்தோட வசூல இந்த படம் முறியடிச்சு 50 கோடி வசூல் பண்ண முதல் படங்கிற பெருமைய அடைஞ்சது.இதுக்கு அடுத்து 2005 பொங்கலுக்கு ரிலீசான திருப்பாச்சி,அதே தீபாவளிக்கு வந்த சிவகாசினு நல்ல பேமிலி படமா கொடுத்த விஜய்க்கு லேடீஸ் பேன்ஸ் அதிகரிச்சாங்க.குறிப்பா திருப்பாச்சி படம் விஜய்ய தமிழ்நாட்டு பொண்ணுங்கட்ட ஒரு அண்ணணா கொண்டு போய் சேர்த்துச்சு.

  விஜயோட இந்த நம்ம வீட்டு பையன் மாதிரியே இருக்கானேங்கிற இமேஜ் தான் அவரோட பிளஸ்.அதோட விஜய் படத்துக்கு போன நல்ல பாட்டு , டான்ஸ், பைட் , செண்டிமெண்ட்,காமெடினு எல்லாமே இருக்கும்னு ஒரு பேரும் கிடைச்சது.

  அது வர விஜய்ய ரசிச்ச அதே மக்கள் 2006 ல இருந்து அவர் எது பண்ணாலும் ஒரே மாதிரி இருக்கேனு விமர்சிக்க ஆரம்பிச்சாங்க.ஆதி படம் மிகப்பெரிய தோல்வியா அமைஞ்சது.அதுக்கு அடுத்து வந்த போக்கிரி படம் வேற லெவல் ஹிட் ஆனாலும்.அதுக்கு அடுத்து வந்த சுமார் படங்களான அழகிய தமிழ் மகன் , குருவி பெரிய வரவேற்ப பெறலங்கிறது தான் உண்மை.இப்படி விஜய் தொட்டதொல்லாம் வெற்றியாகுற காலத்த தாண்டி ஒரு மோசமான காலத்துல இருந்தாரு.அவரோட 50வது படமான சுறாவும் தோல்வியடைய சினிமா வட்டாரத்துல விஜய் அவ்வள்வு தான்னு முடிவே பண்ணீட்டாங்க.ஆனா என்னதான் தோல்வி படங்கள் குடுத்தாலும் விஜய்க்கு மக்கள் கிட்ட இருந்த வரவேற்பும்,அவரோட ரசிகர்கள் அவர் மேல வைச்சிருந்த நம்பிக்கையும் குறையவேயில்லை

  2011 ல பல பிரச்சனைகளை கடந்து விஜய்யோட காவலன் படம் .இங்க இருந்து தான் விஜய்க்கு அரசியல் ரீதியான பிரச்சனைகள் வர ஆரம்பிச்சது.அத தாண்டி தோல்வி படங்கள கொடுத்துட்டு இருந்த விஜய்க்கு இந்த படம் ஒரு ஆறுதலா அமைஞ்சது.அடுத்ததா 2011 தீபாவளிக்கு ஓபனிங் சாங்,தங்கச்சி செண்டிமெண்ட் என பக்கா விஜய் பார்முலாவோட வந்த வேலாயுதம் படம் விஜய் திரும்ப பார்முக்கு வர உதவுச்சு.இதுக்கு அடுத்து 2012ல ஷங்கரோட சேர்ந்து நண்பன் படத்துல நடிச்ச விஜய் தன்னோட இயல்பான நடிப்பால எல்லா தரப்பு ஆடியன்ஸ்கிட்டயும் கொண்டு சேர்த்துச்சு.

  2012 தீபாவளி விஜயோட திரைப்பயணத்துல மிக முக்கியமான ஒரு தீபாவளியா அமைஞ்சது.இந்த தீபாவளிக்கு ரிலீசான முருகதாஸ் டைரக்ஷன்ல வந்த துப்பாக்கி படம் விஜய்ய பிடிக்கலனு அது வர சொல்லிட்டு இருந்த அஜித் ரசிகர்கள் கிட்டயும் நல்ல பேர வாங்கி குடுத்துச்சு.இந்த படத்து மூலமா விஜய் அவர் கூட வளர்ந்து வந்த மற்ற ஹீரோக்களை காட்டிலும் மேலும் ஒரு படி தாண்டி போய்ட்டாரு.

  அதுக்கு அடுத்து வந்த தலைவா படம் பல பிரச்சனைகளை கடந்து 10 நாள் லேட்டா ரிலீசாச்சு.இதுக்கு அப்பறம் இவர் படத்துக்கு பிரச்சனை வர்றது ரொம்ப சாதரணமான விஷயமா ஆகிருச்சு.ஜில்லா,கத்தி,புலி,தெறினு எல்லா படத்துக்குமே பிரச்சனைகள் இருந்தது.

  போன வருஷம் ரிலீசான மெர்சல்,இப்போ ரீசண்டா ரிலீசான சர்கார்னு வர்ற படங்களோட வெற்றி மீண்டும் இவரை இந்த ஜெனரேஷனோட மிகப்பெரிய ஸ்டாரா உயர்த்துச்சு.சோ அப்போ இருந்து இப்போ சர்கார் வர இவர் படத்துக்கு வந்த பிரச்சனைகள் மாதிரி வேற யார் படத்துக்கும் வந்ததில்ல.அப்படி வந்திருந்தா அவங்க அத சமாளிச்சுருப்பாங்களானும் தெரியல.

  பொதுவா விஜய் மேல வைக்கப்படுற ஒரு குற்றச்சாட்டு அவர் அப்பாவோட உதவியோட வந்தார்ங்கிறது தான்.உண்மைதாங்க ஆனா அப்பா உதவியோட நிறைய ஹீரோஸ் தமிழ் சினிமால வந்துருக்காங்க.ஆனா எல்லாரும் விஜய் ஆகல அவர் கஷ்டப்பட்டு உழைச்சு தான் இந்த இடத்துக்கு வந்திருக்காரு.

  விஜய் எவ்வளோ வளர்ந்திருக்கார்னா அவர இந்த மூஞ்சியெல்லாம் காசு குடுத்து பார்க்கணுமானு எழுதின அதே வாரபத்திரிக்கை அவருக்கு அடுத்த சூப்பர்ஸ்டார்னு பட்டம் குடுத்துச்சு.
  வெற்றியோ தோல்வியோ விஜய்ய ஒரு கூட்டம் சேர்ந்துசுருச்சுனு நிறைய பேர் ஈஸியா சொல்லிருவாங்க.ஆனா அந்த கூட்டத்தை சம்பாதிக்க விஜய்க்கு 25 வருஷம் ஆகிருக்கு.
  வெற்றி தோல்விகள தாண்டி தன்னோட எப்பவும் இருந்த தன்னோட ரசிகர்கள விஜய் எப்பவுமே மதிக்க தவறுனதில்ல.எந்த பங்ஷன்ல பேச ஆரம்பிக்கும் போதும் என் நெஞ்சில் குடியிக்கும் அன்பு ரசிகர்களேனு அவர் பேச ஆரம்பிக்கிறதுல இருந்து அவரோட பாட்டுல ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீ அல்லவானு சொல்றதும், நீயும் நானும் அண்ணன் தம்பிடானு சொல்லறதுன்னு நிறைய இருக்குங்க.
   சோ 27ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் நம்ம தளபதிக்கு நம்ம டீம் சார்பா ஒரு வாழ்த்துக்கள் சொல்லிரலாம்.
                                                             

  Post Top Ad

  Post Bottom Ad