Header Ads

  • Breaking News

    தனுஷுடன் ஜோடி சேரும் விஷால் பட நாயகி


    தனுஷ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து தான் நடிக்கும் படங்களில் பிஸியாக இருந்த தனுஷ் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படம் இயக்குவதற்கு திரும்பியிருக்கிறார்.



    தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகும் இந்த படத்தில் தனுஷ் இயக்கி நடிக்கிறார்.இவருடன் சரத்குமார்ர்,எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,நாகர்ஜூனா,அதிதி ராவ் ஹயாத்ரி,ஸ்ரீகாந்த் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

    இந்த படத்தில் நடிக்க விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    Post Top Ad

    Post Bottom Ad