Header Ads

  • Breaking News

    சர்கார் அறிவிப்பு - கொண்டாடத்திற்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்


    தளபதி விஜயின் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தயாராகி வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ந் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

    தற்போது படத்தின் முக்கிய அறிவிப்பு செப்டம்பர் 19 காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற செய்தி வெளியானது.இதனால் அக்டோபர் 2 வரை காத்திருக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.


    இந்நிலையில் படக்குழுவினர் எந்த அறிவிப்பை வெளியிடப்போகின்றனர் என்ற ஆர்வத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.சர்கார் படத்தின் சிங்கிள் 21ஆம் தேதி வெளியாகும் என்றும் ஒரு தகவல் உள்ளது.படத்தின் டீசர் பற்றிய தகவல்கள் வெளியாகுமா என்ற விஜய் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு புதன்கிழமை காலை 11 மணிக்கு பதில் கிடைக்கும்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ,ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சர்கார் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ்,யோகி பாபு,ராதாராவி,வரலட்சுமி சரத்குமார் போன்றோர் நடித்துள்ளனர்.

     தீபாவளி அன்று வெளிவரும் இப்படத்திற்கு தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.துப்பாக்கி,கத்தி படங்களை தொடர்ந்து விஜய் - முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.

    Post Top Ad

    Post Bottom Ad