Header Ads

  • Breaking News

    ப்ரியா பவானி சங்கரின் அடுத்த படம்






    சீரியல் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் ப்ரியா பவானி சங்கர்.தமிழ் சினிமாவிற்குள் ரொமாண்டிக் காமெடி படமான மேயாத மான் மூலம் ஹிட் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்.கடந்த மாதம் ரிலீசாகி சக்கை போடு போட்ட கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் நல்ல நடிகை என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது.



    இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் குருதி ஆட்டம் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த படத்தை 8 தோட்டக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார்.இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


    Post Top Ad

    Post Bottom Ad