Header Ads

  • Breaking News

    6வது முறையாக விஜயுடன் மோதும் தனுஷ்



    தீபாவளி அன்று பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவருவது வழக்கம்.இந்தமுறை  தீபாவளிக்கு வெளிவரும் முதல் படமாக அறிவிக்கப்பட்டது தளபதியின் சர்கார்.



    இதற்கு அடுத்தபடியாக தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே படமும் அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக தள்ளி போயின

    இதனால் இரண்டு பெரிய படங்கள் தீபாவளிக்கு மோதும் என்று எதிர்பார்ப்பில் இருந்த கோலிவுட் ரசிகர்களுக்கு சற்று சோகமான செய்தியாக அமைந்தது.



    இதையடுத்து தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

    ஏற்கனவே விஜயுடன் தனுஷ் 5 முறை மோதியுள்ளார்

    திருப்பாச்சி - தேவதையை கண்டேன் (2005 பொங்கல்)

    சிவகாசி - அது ஒரு கனாக்காலம் ( 2005 தீபாவளி)

    அழகிய தமிழ் மகன் - பொல்லாதவன் ( 2007 தீபாவளி)

    வில்லு - படிக்காதவன் ( 2009 பொங்கல்)

    காவலன் - ஆடுகளம் ( 2011 பொங்கல்)



    தற்போது 6-வது முறையாக மீண்டும் 2018 தீபாவளிக்கு விஜய் - தனுஷ் மோதல் ஏற்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    அதோடு இரண்டு படங்களும் போட்டி போடவில்லை இரண்டு படங்களும் சேர்ந்து தீபாவளி பண்டிகைக்கு வருகிறது என விஜய் ரசிகர்களும்,தனுஷ் ரசிகர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.இது கோலிவுட் வட்டாரத்திற்கு ஒரு நல்ல தீபாவளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Post Top Ad

    Post Bottom Ad